×

வெங்கடதாரஅள்ளி புதூரில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க கோரிக்கை

கடத்தூர், நவ15: கடத்தூர் அருகே வெங்கடதாரஅள்ளி புதூரில், குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடதாரஅள்ளி ஊராட்சியில் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் செல்லும் வால்வு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 5மாதமாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீரை அப்பகுதி மக்கள், டியூப் அமைத்து குடங்களில் பிடித்து செல்கின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vengadatara Malli ,
× RELATED குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில்...