×

கொங்கு பள்ளி மாணவர் கராத்தே போட்டியில் ேதர்வு

திருப்பூர், நவ.15:  ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் கோகுல கிருஷ்ணன் கராத்தே போட்டியில் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான கராத்தே தேர்வு போட்டி ஈரோட்டில் கடந்த வாரம் நடந்தது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 62 கிலோ எடை பிரிவில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். அசாமில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags : Kongu ,school student karate competition ,
× RELATED தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்