×

மண்டல டேக்வாண்டோ ேபாட்டி பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 6 தங்கம் உள்பட 18 பதக்கம் குவித்தது

பெரம்பலூர்,நவ.15:  பெரம்பலூர் மண்டல அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 தங்கம் உள்பட 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்
    பெரம்பலூர் மண்டல அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் வேப்பந்தட்டை தாலுக்கா, உடும்பியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டிகளில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 50பேர் கலந்துகொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் 17 வயது மற்றும் 19வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் 18 பதக்கங்களை பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது. 7வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3 தங்கப் பதக்கம், 19வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 தங்கப்பதக்கம், 14வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1 தங்கப்பதக்கம் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களில் 5மாணவிகளும், ஒரு மாணவரும் மாநில அளவில் நடைபெறவுள்ள டேக்வாண்டோ போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்.    குறிப்பாக பரணி என்ற மாணவரும், சத்யா, காவ்யா, உமா, சங்கீதா, விஜயகுமாரி ஆகிய மாணவிகளும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அருளரங்கன், மாவட்டக்கல்விஅலுவலர் அம்பிகாபதி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியின்போது பள்ளித் தலைமை ஆசிரியர் கலைமகள், உடற்கல்வி ஆசிரியர் ரவி உடனிருந்தனர்.  

Tags : Higher Secondary School ,Downtown Toppati Basmullar ,
× RELATED இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு, பேரணி