ராமநாதபுரத்தில் உள்ள இன்பண்ட் ஜீசஸ் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரம் இன்பண்ட் ஜீசஸ் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் நவ.14ம் தேதி நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறது. ராமநாதபுரம் சொக்கலிங்கபுரம் இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில ஏராளமான குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கல்வி, அறிவியல், கலை, விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தனர். முன்னதாக மேஜிக் ஷோ நடத்தப்பட்டது. இதில் பேப்பருக்குள் இருந்து நாட்டின் சமாதான சின்னமான புறாவை வரவழைத்து குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சகோ.சே ரேமண்ட் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Children's Day Celebration ,Ramanathapuram ,Infant Jesus School ,
× RELATED ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில்...