×

4ஜி அலைக்கற்றை வேண்டி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் பேரணி

நாகர்கோவில், நவ.15: நாகர்கோவிலில் பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை வேண்டி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பேரணி நடத்தினர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒடுக்கீடு செய்ய வேண்டும். 15 சதவீதம் கூடிய சம்பள மாற்றம் செய்ய வேண்டும். 2017 முதல் ஒய்வூதிய மாற்றம் வேண்டும். 2வது சம்பள மாற்றத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் கே.பி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பிருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் வரை, பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜூ மற்றும் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வராஜன், ராஜன், மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : BSNL ,
× RELATED தி.கோடு நகரில் பலத்த மழை