×

மார்த்தாண்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாைல அணிவித்து காங். போராட்டம்

மார்த்தாண்டம், நவ.15:  கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கேட்டும், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் மார்த்தாண்டம் பஸ் நிலைய பகுதியில் நடந்தது. மாவட்ட தலைவர் திபாகர் தலைமை வகித்தார். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தொடங்கி வைத்து பேசினார். ேபரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அஜெய், ஜெரின், விபின் முன்னிலை வகித்தனர்.

 காங்கிரசார் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனங்களில் மெழுகுவர்த்திகளை ஏந்தியும், கண்கள் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பால்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சில்வெஸ்டர், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆமோஸ், சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின் சிரில், மாநில பொதுச்செயலாளர்கள் வின்ஸ் எல்வின், கிள்ளியூர் தொகுதி தலைவர் அபிஷாந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Kang ,garland ,Karthi ,
× RELATED இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு