×

குருசுமலையில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி போராட்டம்

தக்கலை,  நவ.15: குமரி மாவட்டம் களியல் கிராமத்துக்குட்பட்ட குருசுமலையில்  அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம்  முளகுமூடு தூய மரியன்னை ஆலய அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்  ஞானதாஸ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், வசந்தகுமார்,  முன்னாள் எம்பி. ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் ஆமோஸ்,  மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றி வேல், ஐனதாதளம் (எஸ்) மாவட்ட தலைவர்  தெய்வ ராஜன், தமாகா மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், மேல்புறம் வட்டார  கிறிஸ்தவ இயக்க தலைவர் மோகன் ராஜ், காந்திய மக்கள் இயக்க தலைவர் கதிரேசன்,  மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், குருசுமலை  அறக்கட்டளை  செயலாளர் வின்சென்ட் கெ.பீட்டர், அருட்பணி டோமினிக் கடாட்ச தாஸ், மதுரை  நாடார் மகாஜன சங்க மாநில துணை தலைவர் நெல்சன், பெந்தெகொஸ்தே சபை சேம்ராஜ்,   அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் ஸ்டீபன், குருசுமலை பாதுகாவலர் அனில்குமார்,  ஜனதா தளம் தொழிலாளர் சம்மேளன மாவட்ட துணை தலைவர் ஜெபர்லால்,  உள்ளிட்டவர்கள் கலந்து ெகாண்டனர். கூட்டத்தில் குருசுமலைக்கு மின்சார,  குடிநீர், கழிவறை, சாலை வசதிகள் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுவது,  கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் போராட்டம் நடத்துவது என  தீர்மானிக்கப்பட்டது.  போராட்டக்குழு தலைவராக ஆமோஸ், துணை தலைவராக கடையால்  மணி, மோகன் ராஜ், றாபி, செயலாளராக சேகர், ஜெயசிங், சிற்றாறு ரவிச்சந்திரன்,  பொது செயலாளராக ஞானதாஸ், பொருளாளராக பிரதீப் ராஜ் மற்றும் செயற்குழு  உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED தொலையாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா