×

அஞ்சுகிராமம் அருகே கணவனை பிரிந்து வரக்கோரி மகன் மீது தாக்குதல் இளம்பெண் போலீசில் புகார்

அஞ்சுகிராமம், நவ.15:  அஞ்சுகிராமம் அருகே ராஜாவூரைச் சேர்ந்தவர் கனீஷ் மனைவி சுபி(22) இவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,  எனக்கு ஏற்கனவே பெற்றோர் பார்த்து திருமணம் நடந்தது. அதில் ஒரு மகன் பிறந்துள்ளான். பிறகு கணவர் பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு  நெய்யூரை சேர்ந்த கனீஷ் (33) என்பவரை 2 வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டேன். அதன்மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது.   எனது தாயாரை விட்டு தந்தை பிரிந்து சென்று விட்டார். இதனால் மருங்கூரைச் சேர்ந்த அஜய் என்ற அப்துல்லாவுடன் தாயார் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.அப்துல்லா என்னிடம் நீ கணவனை விட்டுவிட்டு எங்களுடன் வந்துவிடு. நான் வேறொருவரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதற்கு நான் மறுத்தேன். இதனால் அப்துல்லா  என்னையும், கணவரையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அப்துல்லா அரிவாளுடன்  வீட்டிற்கு வந்து கணவரை விட்டுவிட்டு எங்களுடன் வந்துவிடு என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்துல்லா, மகனை காலால் தாக்கியுள்ளார் மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்லாவை தேடி வருகின்றனர்.

Tags : teenager ,assassin ,Anchagram ,
× RELATED திருமங்கலம் அருகே முன்விரோதத்தில்...