×

தக்கலை டவுன்ஹால் அருகில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் தற்காலிக கடைகள் கட்டப்படுமா?

தக்கலை, நவ.15 : தக்கலை  பழையபஸ் நிலையம் அருகில் டவுன் ஹால் உள்ளது.  இதன் அருகில் 9.750 சென்ட்  நிலம் உள்ளது. இதில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்  மூடப்பட்டது. அதன் பிறகு கடந்த பல வருடங்களாக காலியாகவே கிடந்ததால் தனியார்  ஒருவர் அனுபவித்து வந்தார். சுமார் 2 கோடி மதிப்பிலான இந்த இடத்தை  நகராட்சி வசமாக்க ஆணையாளர் பொறுப்பு வகித்த சரவணகுமார் திட்டமிட்டார்.  இதன்படி ஆக்ரமித்து வைத்துள்ள இடத்தை 10 நாட்களில் காலி செய்யும்படி ஆகஸ்ட்  21ல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.  டவுன் ஹால் விரிவுபடுத்துதல், சாலையை  அகலப்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நிலம்  தேவைப்படுவதால் ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கும் நிலத்தை நகராட்சியிடம்  ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் சம்பந்தப்பட்ட  நபரை அழைத்து பேசி நிலத்தை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து  இரண்டாவது முறையாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதன் பிறகும் நிலத்தை  ஒப்படைக்க முன் வரவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி ஆக்ரமிப்பு  செய்யப்பட்ட இடத்தை நகராட்சி  கையகப்படுத்தியதாக தண்டோரா போட்டு, அறிவிப்பு  வெளியிடப்பட்டதுடன் சீல் ைவக்கப்பட்டு, முள் வேலி அமைக்கப்பட்டது.  இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட இடத்தில்  இருந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
ஆக்ரமிப்பில் இருந்த  இடம் 9.750 சென்ட் ஆகும். தற்போது முள் வேலி போடப்பட்டுள்ள பகுதிகள்  சாலையினை ஆக்ரமித்து  போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் ஆக்ரமிப்பு  நிலத்தை முறையாக அளவீடு செய்து எடுக்க வேண்டும் எனவும், இந்த பகுதியில்  குப்பைகள் சாலையோரம் கொட்டுவதால் சகாதார சீர் கேடு ஏற்படுவதாக  கூறப்படுகிறது.

எனவே குப்பைத் தொட்டி வைத்து குப்பைகளை எடுக்க வேண்டும் என  அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். இதனிடையே கையகப்படுத்தப்பட்ட  நிலத்தில் தற்காலிக கடைகள் அமைத்தால் நகராட்சிக்கு வருமானமும் பெருகும்.  சாலை ஓர கடைகளை தவிர்த்து போக்குவரத்துக்கு இடையூறின்றி அமையும் என  பொதுமக்கள் கருதுகின்றனர். இப்பகுதியில் சுமார் 20 தற்காலிக கடைகள் அமைத்து  தினசரி வாடகைக்கு விட்டால் தொழில் தொடங்குபவருக்கு வாய்ப்புகள் அமையும்  சூழல் உள்ளது. ஆதலால் நகராட்சி நிர்வாகம் காலத்தை விரயம் செய்யாமல்  தற்காலிக கடைகளை அமைக்க உடனடியாக முன் வரவேண்டும்.

Tags : shops ,tunnel ,township ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!