×

முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

பரமத்திவேலூர், நவ.14:   பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா கொண்டாடப்பட்டது. முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி கோயிலில் சூரசம்ஹார விழா கடந்த 8 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று கந்தசஷ்டி விழாவையொட்டி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயில், முருகன் கோயில், பரமத்திவேலூர் பேட்டை மகா பகவதி அம்மன் கோயில் என அனைத்து கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. பொத்தனூர் பச்சைமலை முருகன் கோயிலிலும், பாலப்பட்டி கதிர்மலை கதிர்காம முருகன் கோயிலிலும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள ஏராளமான முருக பக்தர்களும், பொதுமக்களும் கந்தசஷ்டி விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலூகா காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.    சூரனின் யானைத்தலை, சிங்கத்தலை, ஆட்டுத்தலை ஆகியவற்றை முருகப்பெருமான் வதம்  செய்தார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சுவாமி மீது வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அம்பிகாதேவி, செயல் அலுவலர் சுதா ஆகியோர் செய்திருந்தனர். இன்று சுவாமி மயில் வாகனத்தில்  காட்சி தருகிறார். இதனைத்தொடர்ந்து சுவாமி  திருக்கல்யணம் நடக்கிறது. திருச்செங்கோட்டில் ஆறுமுகசுவாமி திருக்கோவில் சார்பில் சூரசம்ஹார விழா நான்கு ரத வீதிகளிலும் நடந்தது.  

Tags : Churasamahara ,festival ,temples ,Murugan ,
× RELATED தாழவேடு, ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீ...