×

பொன்னமராவதி அருகே ஆதிசிவன் கோயில் கும்பாபிஷேக விழா: காளிமுத்தம்மன் ஊர்வலம்

பொன்னமராவதி, நவ.14:  ஆதிசிவன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான காளிமுத்தம்மன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காளிமுத்தம்மன் சுவாமி ஊர்வலம் கோயிலில் தொடங்கி ஒயிலாட்டம், தாளம் தப்பட்டத்துடன் கேசராபட்டி, உலகம்பட்டி, கண்டியாநத்தம், புதுப்பட்டி, கொப்பனாபட்டி, பொன்னமராவதி வலையபட்டி வழியாக சென்று வந்தது. வரும் வழிகளில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கணக்கம்பட்டி சத்குரு பழனிச்சாமி சித்தர் பீட அன்பர்கள், கேசராபட்டி காசிலிங்கபாளையம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : festival ,Adi Siva Temple ,rally ,Kalimuttumman ,Ponnamaravathi ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...