×

புதுகை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டு போட்டி

புதுக்கோட்டை, நவ.14:  புதுகை மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள்   ஆடவர் மற்றும் மகளிருக்கு வரும் 22ம் தேதி காலை 9  மணி முதல் புதுகை மாவட்ட  விளையாட்டரங்கத்தில்   நடைபெறவுள்ளது.  இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இவ்விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த விளையாட்டுப் போட்டிகளில்  கை, கால் ஊனமுற்றோர்,  50மீ ஓட்டம்  கால் ஊனமுற்றோர், 100மீ  ஓட்டம் கை ஊனமுற்றோர், 50மீ ஓட்டம் குள்ளமானோர், குண்டு எறிதல், கால் ஊனமுற்றோர், 100மீ சக்கர நாற்காலி, இரு கால்களும் ஊனமுற்றோர், பார்வையற்றோர் 50மீ ஓட்டம், முற்றிலும் பார்வையற்றோர், 100மீ ஓட்டம், மிக குறைந்த பார்வையற்றோர்,  நின்ற நிலையில் தாண்டுதல், மிக குறைந்த பார்வையற்றோர், குண்டு எறிதல் போட்டிக்கு முற்றிலும் பார்வையற்றோர், மிக குறைந்த பார்வையற்றோராக இருத்தல் அவசியம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கென 50மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், மூளை நரம்பு பாதிப்பு, கைப்பந்து எறிதல், ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருக்கும், காது கேளாதோர் 100மீ ஓட்டம், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400மீ ஓட்டம் நடைபெறுகிறது.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள்  கண்டிப்பாக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அக்குறிப்பிட்ட பிரிவை சார்நதவரா என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். மாவட்ட அளவில் முதல் இடத்ததை  பெறுபவர்கள்  மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளுதல் வேண்டும். சக்கர நாற்காலி போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சக்கர நாற்காலியுடன் கலந்துகொள்ள  வேண்டும். விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உரிய ஆவணங்களுடன் வரும் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு புதுகை மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Group sports competition ,district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...