×

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா

ஆலங்குடி, நவ.14: ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி காவடித்திருவிழா நடந்தது.  ஆலங்குடியில் 2வது குருஸ்தலமாக விளங்கக்கூடிய தர்மசம்வர்தினி உடனுறை நாமபுரீஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் முருகன் வள்ளி, தெய்வானைக்கு சந்தனகாப்பு அலங்காரமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. தினமும் சிவனடியார்களால் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் 51 காவடிகளை சுமந்தும், 108 தீர்த்த கலசங்களையும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாமபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியை அடைந்தது.

 இதனைத்தொடர்ந்து, கலசங்களில் கொண்டு செல்லப்பட்ட தீர்த்தங்களால் முருகன் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.சிவாச்சாரியார்களால் தீபாராதனை காட்டப்பட்டது. கந்த சஷ்டிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Kandasakti Festival ,Alangudi Namumpireswarar Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் கந்தசஷ்டி விழா