குழந்தைகள் தின விழா

திண்டுக்கல், நவ. 14: திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் பிரின்ஸி தலைமை வகிக்க, முதல்வர் ஜோஸ்பின் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். குழந்தைகளை மகிழ்விக்கும் ஆசிரியைகளின் நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி சந்தனமேரி கீதா மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Tags : Children's Day Festival ,
× RELATED அரசு நடுநிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா