×

பொன்னமராவதி பகுதியில் தீபாவளியையொட்டி விளையாட்டு போட்டி

பொன்னமராவதி, நவ.8: பொன்னமராவதி பகுதியில் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வலையபட்டி யூனியன் கிளப் சார்பில் அங்குள்ள அடைக்கன் குளக்கரையில் விளையாட்டு விழா  நடந்தது.பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள்  வழங்கப்பட்டது. யோகா மற்றும் ஸ்கெட்டிங்கில் கின்னஸ் சாதனை மாணவி  இனியா, மாணவர் இளங்கதிர் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.   வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம், கனரா வங்கி மேலாளர் யுவராஜ் ஆகியோர்  பரிசுகளை வழங்கினர். இதேபோல  கேசராபட்டியில் இளைஞர்கள் சார்பில் சாக்குஓட்டம், ஸ்கிப்பிங்,  ஓட்டப்பந்தயம், பானைஉடைத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்  நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல கண்டியாநத்தம் கிராமத்தில்  செவன்ஸ்டார் குழு சார்பில் சிறுவர்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது.

Tags : Diwali ,Ponnaravaradi ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...