×

வாடிப்பட்டி அருகே ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

வாடிப்பட்டி, நவ. 8: வாடிப்பட்டி அருகே ஆற்றில் குளித்த போது மாயமான உறவினரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது உறவினர்கள் 4வழிச்சாலையில் மறியலில்  ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மதுரை வாடிப்பட்டி தாலுகா சின்னஇரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பென்னிராஜ் மகன் பாரதி(25). பந்தல் அமைப்பாளரான இவர் நேற்று காலை வாடிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி  முல்லை பெரியாறு பிரதான கால்வாயில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாரதி ஆற்றில் மாயமானார். அவரை தேடும் பணியில் சோழவந்தான் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.  இந்நிலையில் ஆற்றில் மாயமான பாரதியை உடனே மீட்டுதர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் சம்பவ இடம் வந்த போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இருப்பினும் மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். அதனை தொடர்ந்து சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், வாடிப்பட்டி தாசில்தார் பார்த்தீபன், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, ரெஜினா உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி ஆற்றில் நீரினை நிறுத்திடவும் கூடுதல் தீயணைப்பு படையினரை வழவழைத்து பாரதியை தேடும் பணியை துரிதப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கு பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : river ,Wadipatti ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை