×

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று துவக்கம்

திருத்தணி நவ.8:திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக  விளங்கும் திருத்தலமாகும். இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும்.
அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் வில்வம் மற்றும் பூக்களை கொண்டு லட்சார்ச்சனை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு விழா, இன்று காலை 10 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்குகிறது. புஷ்ப அலங்காரமும், மாலை 5 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், 6 மணிக்கு பக்தி சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியமும் நடைபெறுகிறது.2ம் நாளான நாளை காலை 10 மணிக்கு மூலவருக்கு பட்டு அலங்காரம், மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3ம் நாள் (10ம் தேதி) மூலவருக்கு தங்க கவச அலங்காரம், இன்னிசை கச்சேரி நடக்கிறது. 4ம் நாள் (11ம் தேதி) காலை 10 மணிக்கு மூலவருக்கு திருவாபரண அலங்காரமும், தொடர்ந்து மாலையில் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது. 5ம் நாளான (12ம் தேதி) காலை 10 மணிக்கு மூலவருக்கு வெள்ளி காப்பு அலங்காரமும் தொடர்ந்து 6 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.
6ம் நாள் (13ம் தேதி)  காலை 10 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சண்முகப் பெருமான் உற்சவ மூர்த்திக்கு வில்வம் மற்றும் பல வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நிறைவு நாளான (14ம் தேதி)  காலை 10 மணிக்கு  கல்யாண உற்சவருக்கு  திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள், அலுவலர்கள் செய்து வரு
கின்றனர்.

Tags : Kandasakti Festival ,Tiruttani Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயில் கோபுர கலசம் சேதம்