×

கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளிக்கு தூய்மை பள்ளி விருது

ஈரோடு, நவ. 8: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2014ம் ஆண்டு முதல் தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது. இதில், பள்ளியில் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, சோப்புடன் கூடிய கை கழுவும் வசதி, பாரமரிப்பு, செயலாக்கம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விருது வழங்கப்படும். அதன்படி, ஈரோடு மாவட்ட அளவில் சிறந்த தூய்மை பள்ளி விருது நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் மூலம் ரொக்க பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kongu National Matriculation School ,
× RELATED கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளிக்கு தூய்மை பள்ளி விருது