×

இடைப்பாடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


இடைப்பாடியில்
டெங்கு காய்ச்சல் தடுப்பு
விழிப்புணர்வு பேரணி
இடைப்பாடி, நவ.8:  இடைப்பாடியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, ரோட்டரி சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இடைப்பாடியில் இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை ஆயுஸ் மருத்துவம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இடைப்பாடி தலைமை மருத்துவர் மோகன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பிரபாகர், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், சரவணன், இடைப்பாடி நகராட்சி ஆணையாளர் முருகன், ஆயுஸ் மருத்துவ அலுவலர் தேவி, துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தா உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் வரவேற்றார்.

பேரணியை சேலம், நாமக்கல் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பன்றிக்காய்ச்சல், அறிகுறி மற்றும் தடுப்பு முறைகள், காய்ச்சல் பரவாமல் காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகராட்சி துப்புரவு அலுவலர்கள் தட்டிகளை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.   

Tags : Dengue Fever Prevention Awareness Rally ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி