×

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து மனைகளாக விற்பனை

பள்ளிபாளையம், நவ.8: வாய்கால் திருட்டு போனதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக உளவு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால் திருட்டு போனதாக கடந்த சிலநாட்கள் முன்பு தமிழக தேசிய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆதவன் புகார் செய்தார். சினிமாவில் வருவதை போல பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் கிராம அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேரில் விசாரணை மேற்கொண்டார். கால்வாய் இருந்த பகுதியை மூடி அதை வீட்டுமனைகளாக மாற்றி பலரும் வீடுகளை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கால்வாய் திருட்டு தொடர்பாக நாமக்கல் மாவட்ட உளவு துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கால்வாய் வரைபட ஆவணங்களின் நகல்களை பெற்ற காவல்துணை கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவினர் நேற்று பிரச்னைக்குரிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில் கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நீர்வழித்தட ஆக்கிரமிப்பு சட்டத்தின்படி இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமென்பதால், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இது போலவே அலமேடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் உள்ள கால்வாய் நீர்வழித்தடம் கிராம வரைபடத்தில் இருந்த போதிலும், கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கால்வாய் தொடர்பாக புகார் கொடுத்த தமிழக தேசிய கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆதவன் கூறும் போது, புகார் குறித்து அதிகாரிகள் தீர விசாரித்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதில் அரசியல் குறுக்கீடுகள் இருக்குமென கருதுவதால், அதிகாரிகளின் நடவடிக்கையில் உறுதி சேர்க்கும் வகையில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குடிப்பதை கண்டித்ததால்

Tags : Pallipalayam ,canal ,area ,Agraharam ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு