×

சிட்கோ தொழிற்சாலை பகுதியில் மின் திருட்டு : ரூ.30 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், சென்னை தெற்கு -1 மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்சாலை பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 10  மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ₹26,71,371 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க கூடுதலாக சமரசத் தொகை ₹3,36,000 செலுத்தியதால் காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர், அமலாக்கம் சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : plant area ,SIDCO ,
× RELATED மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி...