×

தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார விழா

ஆரல்வாய்மொழி, நவ.8:  தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழா இன்று (8ம் தேதி) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழாவினை முன்னிட்டு இன்று (8 ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேகங்கள், 12.30 மணிக்கு காப்பு கட்டுதல், 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. கந்தஷஸ்டி விழா நடைபெறும் 7 நாட்களும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறுகிறது.
13ம் தேதி மாலை 3 மணிக்கு 10 வகை கிராமிய கலை நிகழ்ச்சியுடன் சூரசம்ஹார விழா ஆரம்பமாகிறது. மாலை 4 மணிக்கு செக்கர்கிரி வேலவன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளலும், 6.30 மணிக்கு முருகன் கோயில் அடிவாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர் ந்து வான வேடிக்கை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு வெற்றிவேலன் மயில்வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
14ம் தேதி காலை 9 மணி க்கு செக்கர்கிரி வேலவன் ஆறாட்டுக்கு எழுந்தருளல், 10 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, 11 மணிக்கு செக்கர்கிரி வேலவன் பச்சை சார்த்தி எழுந்தருளல், பகல் 11.30 மணிக்கு செக்கர்கிரி மலையில் சிறப்பு அன்னதானம், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து ஆகியன நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Thooval Chekkiri Subramaniyaswamy Temple Churasamahara Festival ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்