×

கெளரி விரதத்தையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, நவ.8: கௌரி விரதத்தை முன்னிட்டு, தர்மபுரி முருகன் கோயில்களில் படையல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.ஐப்பசி மாத அமாவாசையில், சுமங்கலி பெண்கள் கௌரி விரதம் இருப்பது வழக்கம். தாலி பாக்கியம் நிலைக்கவும், கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், வீட்டில் மங்கள நிகழ்ச்சி தொடரவும் கௌரி விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். நேற்று ஏராளமான பெண்கள் விரதம் இருந்து, குமாரசாமிபேட்டை முருகன் கோயிலில் படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.

புதிதாக வாங்கிய முறத்தில் அதிரசம், வெல்லம், மஞ்சள், தாலிக்கொடி, தேங்காய், வாழைப்பழம், பூ வைத்து வழிபட்டனர்.  இதே போல் அன்னசாகரம் சிவசுப்ரமணியசுவாமி கோயில், நெசவாளர் நகர் சௌடேஸ்வரி அம்மன் கோயில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோயில், எஸ்விரோடு அங்காளம்மன் கோயில், அதியமான்கோட்டை மாரியம்மன் கோயில், உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கௌரி விரதம் மேற்கொண்ட பெண்கள் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags : temples ,Ghari ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு