கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் தீபாவளி விழா

நாகர்கோவில், நவ.8:  நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட கோயிலில் தீபாவளி விழா ெகாண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆதி பராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடைபெற்றது.

காலையில் அன்னதானம் மற்றும் ஆடை தானத்தை சக்தி பீட தலைவர் சின்னத்தம்பி வழங்கினார்.

விழாவையொட்டி புளியடி மனவளர்ச்சி குன்றியோர் மையம், திருப்பதி சாரம் மன வளர்ச்சி குன்றியோர் மையம், வெள்ளமடம் ஆயர் லியோன் மாணவர் இல்லம், வசந்தம் சிறுமியர் இல்லம் ஆகியவற்றுக்கு 12 வகையான இனிப்புகள் மற்றும் காலை உணவுகள் வழங்கப்பட்டது.  நாகர்கோவில் மழலையர் இல்லம், பொன்னப்பநாடார் காலனி சாரதா தேவி இல்லம், இருளப்பபுரம் காமராஜ் பாலமந்திர் ஆகியவற்றுக்கும் இனிப்பு மற்றும் அரிசி மூடை வழங்கப்பட்டது.  பணி செய்யும் மகளிர் உட்பட 108 பேருக்கு ஆடைதானம் செய்யப்பட்டது.  காமராஜர் பாலமந்திரில் உள்ள குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து இனிப்பு, அரிசி மூடை, ஆடைகளை சக்தி பீட துணைத்தலைவர் அருணாச்சலம் வழங்கினார். சீதப்பால் திருவள்ளுவர் அறக்கட்டளை முதியோர் இல்லம், முக்கடல் சாந்தி ஆஸ்ரமத்தில் முதியோர்களுக்கு ஆடைதானம், அன்னதானம் ஆகியவற்றை சிவதாணு, கண்ணன் கலா வழங்கினர்.

Related Stories: