×

மானூர் அருகே பைக் மோதி முதியவர் பலி

மானூர், நவ. 8: ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் (58). இவர் மானூர் பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த டேனியலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து    மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Manoor ,
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்