×

இலவச சைக்கிள் வழங்கும் விழா

நெல்லை, நவ. 8: மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் முகமது அபுபக்கர் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் முகம்மது மீரான் மைதீன், துணை தலைவர் முகமதுஅலி அக்பர், பொருளாளர் அப்துல்மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜிலா சத்யானந்த் எம்பி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். 182 மாணவர்கள், 292 மாணவிகள் என மொத்தம் 474 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மேலப்பாளையம் அதிமுக பகுதி செயலாளர் ஹயாத், பேச்சாளர் சிபா முருகன், நத்தம் வெள்ளப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : bicycle delivery ceremony ,
× RELATED இலவச சைக்கிள் வழங்கும் விழா