×

வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் நெற்பயிரில் இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த செயல்விளக்க பயிற்சி

மன்னார்குடி, நவ.2: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டு புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் வேளா ண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் பாஸ்கரன் செயல்விளக்க பயிற்சியை துவக்கி வைத்து முட்டை ஒட்டுண்ணிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.  
வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிபேராசிரியர்  ராஜா ரமேஷ் கூறுகையில், நெற்பயிரானது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதலால் அதிக மகசூல்  இழப்பு உண்டாகும். இதனை கட்டுப்படுத்தும் நன்மை செய்யும் பூச்சியான டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஆய்வகங்களில் உற்பத்தி செய்து முட்டைகளை அட்டையில் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றினை நெற்பயிர்கள் தூர்களின்  அடிப்பகுதியில் சூரிய ஒளி  அவற்றின் மேல் படாத வாறு கட்டிவிட வேண்டும். முட்டை ஒட்டுண்ணிகளான இவை பூச்சிகளின் முட்டைகளை தேடி உண்டு அழிக்கிறது.
நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் என்கின்ற முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 30 மற்றும் 37 நாட்களுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 2சிசி என்ற அளவில் வெளியிட வேண்டும். 1 சிசியில் ஏறக்குறைய 20000 முட்டைகள் இருக்கும். எனவே 2சிசிக்கு மொத்தமாக 40000 முட்டைகளாது ஒரு முறைக்கு வெளியிடப்படுவதால்  இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதலை இவை சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றன என்றார். தொடர்ந்து விரிவாக்கத்துறை உதவிப்பேராசிரியர் ராமசுப்ரமணியன் ஆலோ
சனை வழங்கினார்.

Tags : village ,Pudukottai ,
× RELATED நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது