×

நெய்வேலியிலிருந்து காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு நேரடியாக சப்ளை

காரைக்கால்,நவ.2: நெய்வேலியிலிருந்து காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு நேரடியாக மின்சாரம் பெறும் பணி விரைவில் முடியவுள்ளது என, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில், 64வது விடுதலை நாள் விழா, நேற்று காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில், எம்எல்ஏ அசனா, கலெக்டர் கேசவன், போலீஸ் எஸ்.பிகள் மாரிமுத்து, வம்சிதரரெட்டி  மற்றும் தியாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் கமலக்கண்ணன் சமாதான புறாவை பறக்கவிட்டு பேசியது: புதுச்சேரியில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், என பல ஐரோப்பியர்கள் வியாபாரத்தலம் அமைத்தாலும், பிரஞ்சுக்காரர்கள் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து 1964 முதல் ஆட்சி புரிந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது, பிரஞ்சு அரசின் நிர்வாகத்தை எதிர்த்து சிறுசிறு போராட்டங்கள் நிகழ்ந்தாலும், பிரிட்டிஷ் இந்திய பகுதியில் காந்திஜி தலைமையில் சுதந்திர போராட்டம் தீவிரடைந்தபோது, புதுச்சேரியிலும் சுதந்திர போராட்டம் தொடங்கியது. பல்வேறு கட்ட போரட்டத்திற்கு பிறகு, 1954 நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது.

அந்த நாளைதான் நாம் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடுகிறோம். புதுச்சேரியில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் காக்க, மானியவிலையில் இடுபொருட்கள், காப்பீடு வழங்குவதை தொடர்ந்து செய்யு வருகிறோம். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தின் 2வது கட்ட விரிவாக்கம் எங்கள் அரசின் முயற்சியால் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.55 கோடியில் மிகவிரைவில் பணிகள் தொடங்கவுள்ளது. நெய்வேலியிலிருந்து காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு நேரடியாக மின்சாரம் பெறும் பணி விரைவில் முடியவுள்ளது. இதன்மூலம் தமிழகத்திலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதை தவிர்த்து, குறைவான விலையில் மின்சாரம் வழங்க வாய்ப்பு உருவாகியுள்ளது. காரைக்கால் நகர் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 8 இடங்களில் நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல அளித்துள்ளது. அதில் காரைக்காலும் ஒன்றாகும், மதுபழகத்தில் அடிமைப்பட்டுள்ள இளைஞர்களை மீட்க சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதேபோல், இன்னும் பல வளர்ச்சி திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. என்றார்.

Tags : Karaikal Substation ,Neyveli ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...