×

நாகை மாவட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை,நவ.2: காலமுறை ஊதியம் வழங்க கோரி நாகை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும்,  சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும்,  விலைவாசி உயர்வுக்கேட்ப மாணவர்களுக்கான உணவு செலவின தொகையை ரூ.5 உயர்த்திட வேண்டும், மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்திட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகை ஒன்றியம் சார்பில் நாகை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம், ஒன்றிய தலைவர் சசிக்கலா தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர் தமிழ்செல்வம்,  ஒன்றிய செயலாளர்  கலியபெருமாள், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க முத்துகிருஷ்ணன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  

தொடர்ந்து மூன்று நாட்கள் நாகை கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு  போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்து மூன்று நாட்கள் நாகை கலெக்டர் அலுவலகம் முன் நாகை-நாகூர்  சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 7வது நாளான நேற்று வட்டார வளர்ச்சி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் செய்த சத்துணவு ஊழியர்கள், இன்று 3ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சென்னையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட போவதாக கூறினர். வேதாரண்யம்: வேதாரண்யம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்  ஐந்து அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சங்க மாவட்ட தலைவர் மதிவாணன், வட்ட செயலாளர்  அசோகன், ஒன்றிய தணிக்கை செயலாளர் வீரமணி, மாவட்ட பொருளாளர் துர்க்காம்பிகா, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பழனித்துரை, சத்துணவு ஓய்வு  ராமமூர்த்தி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nutrient workers ,district ,Nagai ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு