கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

பெருந்துறை. நவ.2 : பெருந்துறை அருகே உள்ள மூணுவள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (28) இவருடைய தம்பி பிரபாகரன் (23). இவர்கள் இருவரும் தங்களுடைய ஊருக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பிரபாகரன் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பெருந்துறை அடுத்த சீனாபுரம் கவுண்டம்பாளையம் பிரிவு அருகே  பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம், மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைக்கில் சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் குன்னத்தூர் அருகே உள்ள தாளப்பதி சேர்ந்த இம்ரான் (30) சத்தியமங்கலம் அருகே உள்ள எராங்காட்டூரை சார்ந்த பரத்குமார்(30), கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன்(32) என தெரிந்தது. இம்ரான், பரத் குமார் ஆகியோர் பெருந்துறையில் பஸ்சுக்காக காத்திருந்த பிரபாகரனை மிரட்டி 3 பவுன் நகைகளை பறித்துள்ளனர். அதுமட்டுமன்றி கடந்த மாதம் விஜயமங்கலம் அருகே உள்ள பாகலூர்  கிராமத்தில் சோலையம்மாள் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகையை திருடியுள்ளனர்.  காஞ்சிக்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் இந்த மூன்று பேரும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுது–்து து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம்  இருந்து 52 பவுன் நகை மற்றும் 2 பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : youths ,robbery ,
× RELATED பெரும்பாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரி வெட்டி கொலை