×

மங்களகிரி ஜோசப் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

புதுக்கோட்டை, நவ.2: புதுக்கோட்டை அருகே மங்களகிரி ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை தலைமை வகித்து தேசியகொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு, குழு உடற்பயிற்சி, பிரமீடுகள், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். புனித வளனார் ஆலய பங்குத் தந்தை அமலன் முன்னிலை வகித்து விளையாட்டு போட்டிகளில் ெவற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பள்ளியின் தாளாளர் ரூபர்ட் வரவேற்றார். குழு நடனங்கள் நடந்தது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, பிரியா ஆகியோர் விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்தினர். நிகழ்ச்சிகளை ஆசிரியை லீனா, அருணா, தயா தொகுத்து வழங்கினர். துணைமுதல்வர் சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ரூபர்ட், நிர்வாக அலுவலர் நிர்மல் ராணி மற்றும் ஆசிரியர்கள், அனைத்து பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Game Festival ,school ,Mangalagiri Joseph Matriculation ,
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்