×

கடனா, அடவிநயினார் அணையில் தண்ணீர் திறப்பு முதல்வர் உத்தரவு

சென்னை, நவ. 2: கடனா, அடவிநயினார் நீர்தேக்கத்தில் இருந்து விவசாயத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா,

அடவிநயினார் கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 2ம் தேதி(இன்று) முதல் மார்ச் 31ம் தேதி வரை 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை மற்றும்   கடையநல்லூர்  வட்டங்களிலுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

Tags : Kadana ,Chief Minister ,dam ,Adinayani ,water opening ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...