மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த ஆசாமி கைது

சேலம், நவ.2: சேலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 பவுன் மீட்கப்பட்டது.சேலம் அருகே தும்பாதுளிப்பட்டி மேல்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி(75). இவரது மனைவி அலமேலு(70). கடந்த மே மாதம் 23ம்தேதி இரவு, இவர்களின் வீட்டிற்குள் புகுந்த 2 பேர், அலமேலுவை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, அவர் அணிந்திருந்த 13பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கந்தசாமியை, அவர்கள் எதுவும் செய்யவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் ெநத்திமேடு நேதாஜி நகரை சேர்ந்த சதீஷ்(32) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து ₹13 பவுன் நகை மீட்கப்பட்டது. இவரது கூட்டாளியான தலைவாசல் பக்கமுள்ள சிறுவாச்சூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர்,  இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருக்கிறார். அவரை இந்த வழக்கில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: