×

வடுவூர் பெரியார் சிலை எதிரில் அடிக்கடி விபத்து : அடிச்சேரி செல்லும் சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ. 1: வடுவூர் பெரியார் சிலை எதிரில் அடிச்சேரி செல்லும் சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மன்னார்குடி அடுத்த  வடுவூர் பெரியார் சிலை எதிரில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூர் இடையே செல்லும்  மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிகிறது. அடிச்சேரி செல்லும் சாலை. மன்னார்குடியில் இருந்து வரும் போது வடுவூர் வடவாறு பாலத்தின் இறக்கத்தில் இடது பக்கமாக இச்சாலை செல்கிறது.
வடுவூர் வடவாறு  பாலத்தை கடக்கும் வாகனங்கள் பாலத்தின் இறக்கத்தில் வேகமாக செல்வது வழக்கம். அதே போல தஞ்சையில் இருந்து வரும் வாக னங்கள் பாலத்தில் ஏறுவதற்காக வேகமாக வருகின்றன. இதனை அடிச்சேரி சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளை கவனிப்பது குறைவாக இருக் கிறது. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அடிச்சேரி, சாத்தனூர், தென்பாதி, சமயன்குடிக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த சாலையினை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் வழியே தினந்தோறும் ஏராளமான மாணவ. மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 விபத்துகள் நடைபெற்று 2 பேர் இறந்துள்ளனர்.
அப்பகுதியில் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம  மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையாக உள்ளது. எனவே அடிச்சேரி செல்லும் பிரிவு சாலையில்  வேகத்தடையை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக  அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Vaduvur Periyar Statue ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...