×

கிருஷ்ணகிரியில் 3வது நாளாக சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரி, நவ.1: கிருஷ்ணகிரியில், 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 245 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கருப்பு உடை அணிந்து 3வது நாளாக சாலை மறியல் நடந்தது.  இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்ட ரீதியான குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ₹5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ₹3 லட்சமும் வழங்க வேண்டும். உணவு செலவு மானியத்தை ₹5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 219 பெண்கள் உள்பட 245 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags : Nirvana Striking Strike ,3rd Day ,Krishnagiri ,
× RELATED உடல் நலம் தேறி வரும் பெண் யானை!