கோவை ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலுவுக்கு இங்கிலாந்து நாட்டின் விருது

கோவை, நவ. 1:லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேம்பாட்டுக்கு பங்காற்றிய ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலுவுக்கு இங்கிலாந்து நாட்டின் சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார். இவரது பங்களிப்பை பாராட்டும் விதமாக இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றம் மற்றும் எசக்ஸ் மருத்துவ சங்கம் இணைந்து சிறப்பு அங்கீகார விருதை கடந்த மாதம் 26ம்தேதி வழங்கியது. இதுபற்றி டாக்டர் பழனிவேலு கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாழ்க்கை முறை மாற்றம், துரித உணவு உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றால் புற்றுநோய், உடல்பருமன், இருதய நோய், ரத்தநாள நோய் அதிகரித்து வருகிறது.

குடலிறக்கம், புற்றுநோய், உடல்பருமனுக்கு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறை, சிறந்ததாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு வகையான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை ெசய்துவருகிறோம். 75 சதவீத புற்றுநோய் வயிறு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில்தான் ஏற்படுகிறது. லேப்ராஸ்கோபிக் ஆபரேசன் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் செலவை குறைக்க முடிகிறது. இம்முறையில், நோய் பாதித்த இடத்தை பெரிதுபடுத்தி ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட இடத்தை துல்லியமாக அகற்ற முடிகிறது. மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. இந்த அதிநவீன லேப்ராஸ்ேகாபிக் அறுவை சிகிச்சை முறையை பாராட்டும் வகையில், தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய மருத்துவர் ஒருவருக்கு இவ்விருது வழங்குவது இதுவே முதல்முறை. இவ்வாறு டாக்டர் பழனிவேலு கூறினார்.

Related Stories:

More
>