×

பைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஆய்வறிக்கை மாநில மாநாட்டுக்கு தேர்வு

பட்டுக்கோட்டை, நவ. 1:  இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான மாவட்ட மாநாடு, தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இந்த மாநாட்டில் ஜூனியர் பிரிவில் பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி கிளப், பைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகிருதீன், நவீன்சங்கர் ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் சரவணக்குமார் துணையுடன் அத்திவெட்டி கோவில்காடுகள் மக்கள் கண்ணோட்டம் என்ற தலைப்பில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவில்காடுகள் பற்றி கள ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை மாவட்ட மாநாட்டில் சமர்ப்பித்தனர். இதில் பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த இந்த ஆய்வறிக்கை,

மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் வகிருதீன், நவீன்சங்கர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சரவணக்குமாரை பைவ்ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சதக்கத்துல்லா, செயலாளர் கலியமூர்த்தி, இயக்குனர்கள் நல்லதம்பி, ஆடிட்டர் சுப்பராயன், டாக்டர் வெங்கட்கணேஷ், முதல்வர் லதா, துணை முதல்வர் ராணி மற்றும் கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் தங்கையன், பொறுப்பாளர் ஜெயசீலன், உறுப்பினர் அப்துல்சுல்தான், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர், சமூக ஆர்வலர் விவேகானந்தன், பேட்டை மூலிகை வைத்தியர் செல்வராஜ் பாராட்டினர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா