×

பாலவிடுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு பொது கூட்டம்

கடவூர், நவ.1: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் பாலவிடுதியில் நடந்தது. தரகம்பட்டி அருகே உள்ள பாலவிடுதி கடைவீதியில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்டக் குழு செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார், மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி, கிளைச் செயலாளர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக் குழு உறுப்பினர் வேல்முருகன் வரவேற்றார். சிறப்பு அமைப்பளர் மாநில குழு உறுப்பினர் சின்னதுரை மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜீ, சக்திவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
கூட்டத்தில் கட்சி நிதியாக ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் பொன்னனியார் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து அதிலிருந்து வாய்க்கால் மூலம் முள்ளிபாடி, மாவத்தூர் வழியாக உடையாபட்டி, பஞ்சப்பட்டி ஏரியில் நீர் நிரப்பிடவும், பாலவிடுதியில் அரசு சுகாதார நிலையம் மைத்திடவும். தரகம்பட்டி பேருந்து நிலையத்திற்குள் அடிப்படை வசதிகளை நிறை வேண்டும் என பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Communist Party ,Communist Party of India ,Baltal ,
× RELATED அலுவலக தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்