×

தனிநபர் திட்டத்தில் அரைகுறையாக நிற்கும் கழிவறைகள்

சாத்தூர், நவ. 1:  சாத்தூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை திட்டம் அரைகுறையாக நிற்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் மாட்டம்,  சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், 48 கிராம ஊராட்சிகளில், 150 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். இதனைப் போக்க முழுசுகாதார இயக்க திட்டம் மூலம், ரூ.12 ஆயிரம் மானியத்தில் கிராமங்களில், தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டன. கழிவறைகளின் கட்டுமானப் பணி, ஊராட்சி செயலர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி கத்தாளம்பட்டி கிராமத்தில் நடந்த கழிவறை கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. கழிவறைகளில் கதவுகள், மேற்கூரை அமைக்கப்படவில்லை. ஆனால், பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டதாக, ஊராட்சி மேற்பார்வையாளர்கள் சான்று வழங்கியுள்ளனர். இதனால், கழிவறைகள் பயன்பாட்டுக்கு வராமலேயே, கட்டுமானப் பணி மேற்கொண்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால், அரசு நிதி ரூ.பல லட்சம் வீணானதாக புகார் தெரிவிக்கின்றனர்.

Tags : bathrooms ,
× RELATED 5000 கழிவறைகள் கட்டி முடிக்க காரணமான...