×

ஊராட்சி பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்,  நவ.1: வாணி கிராமத்தில் ஊராட்சி பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை நீதிபதி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் அருகே வாணி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐஓசி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார். சமூக சேவை சங்க நிறுவன இயக்குனர் கென்னடி வரவேற்றார். குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், தலைமையாசிரியர் உமாதேவி, ஐஓசி மேலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினரான நீதிபதி ராமலிங்கம் முகாமை துவக்கி வைத்தார். டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. டெங்கு வைரஸ் ஏடிஎஸ் வகை கொசுப்புழுக்கள் நல்ல தண்ணீரில் தான் உருவாகின்றன. தினமும் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை மூடி வைத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டாம். காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Dengue Fever Awareness Camp ,Panchayat School ,
× RELATED ஆக்கிரமிப்பில் உள்ள மராடி ஊராட்சி பள்ளி நிலத்தை மீட்டு தர வேண்டும்