×

படேல் பிறந்ததினம் தேசிய ஒருமைப்பாடு மினி மாரத்தான் ஓட்டம்

மதுரை, நவ.1: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒருமைப்பாட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்.31ம் தேதி, தேசிய ஒருமைப்பாடு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் நேற்று தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்திற்கு மதுரை கோட்ட
ரயில்வே மேலாளர் நீனு இட்டியாரா, மலரஞ்சலி செலுத்தினார். ரயில்வே இரு பாலர் பள்ளி, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பணியாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்று, தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை கோட்ட ரயில்வே மேலாளர் கொடியசைத்து துவக்கி வைத்து,

சுதந்திர இந்தியாவின் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேலின், பணிகளை நினைவுகூர்ந்து பேசினார். மதுரையை அடுத்த ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ெதன்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை மல்லிகா முன்னிலை வகித்தார். தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழியை மாணவி ஸ்வேதா வாசிக்க, அனைவரும் உறுதி ஏற்றனர். முன்னதாக, சர்தார் வல்லபாய் படேல குறித்து ஆசிரியை மெர்சி எடுத்துரைத்தார். ஆசிரியை மாலா நன்றி கூறினார்.

Tags : Patel ,
× RELATED ராஜ்கோட் தீ விபத்தில்...