×

ஸ்பிக் நகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் முள்ளக்காடு அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்

ஸ்பிக்நகர், நவ. 1: ஸ்பிக்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி மாவட்டதில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை, விடியற்காலை நேரங்களில் காணப்படும் வெம்பா போன்றவற்றால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஸ்பிக்நகர், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், சவேரியார்புரம், நேருஜி நகர் என ஸ்பிக்நகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பரவி வரும் டெங்கு, பன்றி காய்ச்சல் பீதி காரணமாக காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மக்கள், முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுக்கின்றனர். இதனால் நாளுக்குநாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு வெளிநோயாளியாக சராசரியாக 100 பேர் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக 300 முதல் 350 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் சிகிச்சைக்கு என 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் மற்றும் 5 பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : accumulation ,city ,Mullakkad Government Hospital ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்