×

வள்ளியூரில் கிரிஷ் பேக்கரி ஸ்வீட்ஸ் திறப்பு விழா

வள்ளியூர்,நவ.1:  வள்ளியூரில் கிரிஷ் பேக்கரி, ஸ்வீட்ஸ் திறப்பு விழா நடந்தது.
 வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கண்ணன் குரூப்ஸ்   நிறுவனத்தின் புதிய கிரிஷ் பேக்கரி, ஸ்வீட்ஸ் ராதாபுரம் ரோட்டில் பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.  இதனை கண்ணன் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வெங்கடாசலம் திறந்து வைத்தார். அவரது துணைவியார் பகவதியம்மாள் மற்றும் பிரபல தொழிலதிபர் ஞானதிரவியம் துணைவியார் சுதேச ஹேமலதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வியாபாரத்தை துவக்கி வைத்தனர்.   கண்ணன் ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் ராதாகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத்தினர், வணிகர் நலசங்கத்தினர், வழக்கறிஞர் சங்கத்தினர். மருத்துவர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்ணன் குரூப்ஸ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags : Walloon ,
× RELATED மயங்கி விழுந்த கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு