×

செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தம்மம்பட்டி, அக்.31:  சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்,  குடிநீர் கட்டண உயர்வு, சொத்துவரி, வீட்டு வரிகளை வாபஸ் பெறக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் நாகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நகர துணை செயலாளர் வஜ்ரவேல், மாவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்வை குறைக்க வேண்டும், 2, 6, 7 ஆகிய வார்டுகளில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டியும், சீமை கருவேல முள்மரங்களை அகற்ற வலியுறுத்தியும் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Communist ,India ,demonstration ,Sentharaipatti ,
× RELATED நீட் தேர்வில் குளறுபடி: மருத்துவ...