×

நாளை நடக்கிறது அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்பு







காரைக்குடி, அக் 31: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்து கொண்டு 28 ஆயிரத்து 886 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார் என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா நாளை நவ.1ம் தேதி மதியம் 1.15 க்கு நடக்கவுள்ளது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து பட்டங்களை வழங்க உள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்துரை வழங்குகிறார். அணுசக்திதுறை தலைவர், பாபா அணுஆய்வு மைய இயக்குனர் ரா.சிதம்பரம் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.விழாவில், பல்கலைக்கழக பல்வேறு துறைகள், உறுப்பு கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற 2,435 மாணவ, மாணவிகள், இணைப்பு கல்லூரிகளில் படித்த 10,290 பேர், இணைவுக் கல்வித்திட்டத்தில் படித்த 843 பேர், தொலைநிலைக்கல்வி வாயிலாக படித்த 15,318 பேர் என 28,886 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது.

இதில் 18,708 பேர் மாணவிகள். 129 ஆய்வாளர்கள், எம்.பில், முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பில் முதல் இடம் பெற்ற 143 என 272 பேருக்கு கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெறுகின்றனர். இதில் 33 பேருக்கு தங்கபதக்கம், முதல் தர சான்றிதழும் வழங்கப்படுகிறது’’ என்றார். உடன் பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, சின்டிகேட் உறுப்பினர் ஜெயகாந்தன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Governor ,Faculty of Alappa University ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...