×

முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு எடப்பாடி, மு.க.ஸ்டாலின் மரியாதை பெண்கள் முளைப்பாரி, பாலாபிஷேகம்

மதுரை, அக்.31: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா மாலை அணிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார். அவருடன் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன். முத்துராமலிங்கம், தங்கம் தென்னரசு, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தளபதி, மதுரை மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, மணிமாறன், மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்தைவேல், எஸ்ஸார்கோபி, மருத்துவரணி மாநில துணைத் தலைவர் டாக்டர் சரவணன், பொன்.சேதுராமலிங்கம், பகுதி செயலாளர்கள் தெட்சிணாமூர்த்தி, அக்ரிகணேசன் கலந்துகொண்டனர்.

இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,   தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அமமூக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அஇமூமுக தலைவர் டாக்டர் சேதுராமன், வல்லரசு பாபி தலைவர் அம்மாசி, ஜனநாயக பாபி பொதுச்செயலாளர் வேலுசாமி, தினகரன் பார்வர்டு பிளாக் தலைவர் தினகரன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மாலை அணிவித்தனர். பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தனர்.  திருமங்கலத்தில் தமாகா தெற்கு மாவட்ட தலைவர் குருசாமி, மாநில இளைஞரணி செயலாளர் காமாட்சி, தேமுதிக மாவட்ட செயலாளர் கணபதி, மூமுக மாநில மகளிரணி செயலாளர் சுந்தரசெல்வி, புறநகர் மாவட்ட செயலாளர் செல்வம், புதுநகர் ஆட்டோ சங்க தலைவர் ராஜபாண்டி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

உசிலம்பட்டி ஐந்துகல்ராந்தலில் தேவர் சிலைக்கு அஇபாபி மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தேசியசெயலாளர் தேவராஜ், மாவட்ட செயலாளர் ஆதிசேடன், தேமுதிக மாவட்டசெயலாளர் கணபதி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி தாளாளர் வாலாந்தூர்பாண்டி, கல்லூரி முதல்வர் ஜோதிராஜன், பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவனர் முருகன்ஜி, உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

Tags : Mutturamangedavu ,MK Stalin ,women ,Balabishekam ,
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...