×

பள்ளி செல்லா குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் ஆய்வு

நாகர்கோவில், அக். 31: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்காக நடைபெற்று வருகின்ற உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம், இணைப்பு சிறப்பு பயிற்சி மையம், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான பகல் நேர பாதுகாப்பு மையம் ஆகியவற்றை ஆய்வு செய்திட மாநில திட்ட இயக்குநரால் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டங்களில் பணிபுரியும் சிறப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் நாகப்பட்டினம் ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் 2 நாட்கள் 4 சிறப்பு பயிற்சி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அச்சன்குளம் அரசு தொடக்க பள்ளி, செண்பகராமன்புதூர் அரசு தொடக்க பள்ளி, வில்லுக்குறி அரசு எல்.எம்.ஏ தொடக்க பள்ளி, சிற்றார் அரசு நடுநிலை பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு நடந்தது.
ஆய்வின்போது குழந்ைதகளின் கற்றல் நிலை, தமிழ் ஆங்கில பாடங்களில் எழுதுதல், வாசித்தல் திறன் மற்றும் கணித அடிப்படை திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள விபரம், சத்துணவு வழங்கும் விபரம், தொடர்ந்து பயிலும் மாணவர்கள் விபரம் போன்றவை பார்வையிடப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபானி, ஷீஜா, தயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : schools ,school cellular schools ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...