×

ராமகோபாலன் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு பூஜை

திருச்செந்தூர், அக். 31: ராம கோபாலன் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் இந்து முன்னணியினர் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் 93வது பிறந்த நாளை முன்னிட்டு,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நெல்லை, தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் சக்திவேலன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் பட்டு, பொருளாளர் மணி, சேவா பாரதி பொறுப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும்
இந்து முன்னணியினர், இந்து சிறுவியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   உடன்குடி: தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 93வது பிறந்த நாளையொட்டி 93 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்து வரவேற்றார். நெல்லை மண்டல இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் சக்திவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரபாண்டி, மாவட்ட செயலாளர் சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 93 மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகளை வழங்கி பேசினார். இதில் இந்து முன்னணி ஓன்றிய பொதுச்செயலாளர் கேசவன், நகரசெயலா ளர் சித்திரை, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Special Puja ,Tiruchendur temple ,birthday ,Ramagopalan ,
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி