×

தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் கோவில்பட்டியில் ஆயிரத்து 111 பால்குட ஊர்வலம்

கோவில்பட்டி, அக். 31: கோவில்பட்டியில் அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு சார்பில்  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.  காலை 10 மணிக்கு கோவில்பட்டி அருகே வடக்கு இலுப்பையூரணியில் இருந்து கூட்டமைப்பு நிறுவன தலைவர் அண்ணாத்துரை  தலைமையில் பால்குடம் ஊர்வலம் துவங்கியது. ஆயிரத்து 111 பால்குடங்கள் எடுத்து பெண்கள் ஊர்வலம்  சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக பயணியர் விடுதி முன்புறம் உள்ள தேவர் சிலையை அடைந்ததும், சிலைக்கு பாலாபிஷேகம் செய்து  சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோல் கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதிமுக சார்பில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. .

அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரப்பாண்டியன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாஜ சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், தேமுதிக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமாகா சார்பில் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் முன்புள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோபாஜி முன்னிலையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.வைகுண்டத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கொம்பையாபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர திமுக சார்பில் நகர செயலாளர் பெருமாள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நகர அதிமுக செயலாளர் காசிராஜன் தலைமையில் அதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் சித்திரை ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி சாலையில் தேவர் படத்தை அலங்கரித்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் ராஜவேல், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேதுபாண்டியன், வெங்கடேஷ், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், ஐஎன்டியுசி சந்திரன், புகாரி, கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அமமுக சார்பில் நகர செயலாளர் பால்துரை, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜ சார்பில் மாவட்ட தலைவர் பாலாஜி வைகுண்டத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில், அலங்கரிக்கப்பட்ட தேவர் சிலைக்கு நகர தேவர் பேரவை நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். நகர பாஜ சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட பாஜ துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தென்மண்டல இளைஞரணி தலைவர் பொன்பாண்டி, ஒன்றிய தலைவர் காளிராஜன் ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவ படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் பொம்மையாபுரம் பகுதி மக்கள், முன்னாள் பஞ். தலைவர் ஆறுமுகப்பாண்டி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் 111 பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக தெற்குபொம்மையாபுரத்திற்கு சென்றனர். அங்குள்ள தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். விட்டிலாபுரத்தில் முருகன் தலைமையில் பெண்கள் முளைப்பாரி எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினர். பசுவந்தனை பஜார், கீழமங்கலம், நாகம்பட்டி ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Tags : procession ,Balukuda ,Devar Jayanti Festival Celebration Kovilpatti ,
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்