நாகை நீதிமன்றத்தில் வழக்குகள் பற்றிய விபரங்கள் அறிய தொடுதிரை கணினி திறப்பு

நாகை,அக்.30: நாகை நீதிமன்றத்தில் வழக்குகள் பற்றிய விபரங்கள் அறிய தொடுதிரை கணினி திறக்கப்பட்டுள்ளது. நாகை நீதி மன்ற வளாகத்தில் மனுதாரர்கள் மற்றும் வக்கீல்கள் வசதிக்காக வழக்குகள் பற்றி விபரங்களை தெரிந்து கொள்ள தொடுதிரை கணினி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு  நாகை மாவட்ட தலைமை நீதிபதி பத்மநாதன் தலைமை வகித்து தொடு திரை கணினியை திறந்து வைத்து பேசுகையில்,

நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனுதார்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வழக்குகளின் விபரங்களை தெரிந்து கொள்ள இலவசமாக தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடுதிரை கணினியில் நீதிமன்றத்திற்கு வரும் மனுதார்கள்  வக்கீல்கள்  மற்றும் பொதுமக்கள் தங்களின் வழக்குகளிள் விபரங்களை  பற்றி அறிய வழக்கு எண்ணை பதிவு செய்து வழக்கு விபரத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும் வழக்கின் நிலை, வாய்தா தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ளலாம் என்று நீதிபதி பத்மநாதன் பேசினார்.  விழாவில் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன், குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி  மணிகண்டராஜன்,  உரிமையியல் நீதிமன்ற நீதிபதி புவியரசு, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரவி,  நாகை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நடேசஜெயராமன், செயலாளர் பண்டியன்,  மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>